ADDED : ஏப் 24, 2024 10:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர் : சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனில், பேரூர் அடுத்த பச்சாபாளையத்தை சேர்ந்த சுப்ரமணி, 43, ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த இரு நாட்களாக, பல் வலிக்கு சிகிச்சை பெற விடுமுறை எடுத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டிலிருந்த சுப்ரமணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவரது உடல், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 2003ல் பணியில் சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர்.

