/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
/
நாய்கள் கடித்ததில் மான் உயிரிழப்பு
ADDED : ஜூன் 09, 2024 12:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி;மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி., காலனி பகுதியில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
மலையடிவாரத்தையொட்டி உள்ள பகுதி என்பதால், இப்பகுதியில், காட்டு யானை மற்றும் மான்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், நேற்று, இப்பகுதியில் உள்ள காலியிடத்தில், 2 வயதுடைய புள்ளி மான் உயிரிழந்து கிடந்தது. அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர், மானின் உடலைமீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர். அதில், நாய்கள் கடித்ததால் மான் உயிரிழந்தது தெரியவந்தது.