/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீர் கலப்பதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
/
கழிவுநீர் கலப்பதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
கழிவுநீர் கலப்பதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
கழிவுநீர் கலப்பதை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முடிவு
ADDED : ஜூலை 25, 2024 10:46 PM
அன்னுார் : அன்னுாரில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த, கஞ்சப்பள்ளி ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அன்னூர் பேரூராட்சியில், புவனேஸ்வரி நகர், பழனி கிருஷ்ணா அவென்யூ பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை ஓடைப்பள்ளம் வழியாக குன்னத்தூராம்பாளையத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக ஓடை வழித்தடத்திற்கு, எல்லை கற்கள் நடப்பட்டு, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.
இந்நிலையில் எருக்கலான் குளத்தில் கழிவு நீர் விட திட்டமிட்டு உள்ளதை கண்டித்து, கஞ்சப் பள்ளியில் ஊர் கூட்டம் நடந்தது.
ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னச்சாமி, ஊராட்சி துணை தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், 'பல ஆண்டுகளுக்குப் பிறகு, 90 ஏக்கர் பரப்பளவு உள்ள எருக்கலாம் குளத்தில் மழை நீர் மற்றும் அத்திக்கடவு நீர் நிரம்பி வழிகிறது. சுற்று வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது. விவசாயம் செய்ய துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் இந்தக் குளத்தில் கழிவு நீரை விட அன்னூர் பேரூராட்சி திட்டமிட்டுள்ளது. இதை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இத்துடன் அன்னூர் பயணியர் மாளிகை முன்பு, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கவும், அன்னூர் தாலுகா அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் போலீஸ் ஸ்டேஷனில் மனு கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் திருமூர்த்தி, வார்டு உறுப்பினர்கள், அன்னூர் குளம் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.