/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
3,000 இடங்களில் தாமரை சின்னம் வரைய முடிவு
/
3,000 இடங்களில் தாமரை சின்னம் வரைய முடிவு
ADDED : மார் 23, 2024 10:15 PM
கோவில்பாளையம், : சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய பாரதிய ஜனதா மையக்குழு கூட்டம், கோட்டைபாளையத்தில் நேற்று நடந்தது.
பா.ஜ., மாநகர் மாவட்ட துணைத்தலைவர் செந்தூர் முருகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வெள்ளிங்கிரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், கொண்டையம்பாளையம், அத்திப்பாளையம், கள்ளிப்பாளையம், வெள்ளமடை, வெள்ளானைப்பட்டி, கீரணத்தம், அக்ரஹார சாமக்குளம் ஆகிய ஏழு ஊராட்சிகளிலும், 3000 இடங்களில் தாமரை சின்னமும், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு வாக்களிக்க கோரும், சுவர் வாசகமும் எழுத முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஊராட்சியிலும், தினமும் 200 வீடுகளுக்கு சென்று, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கூறி ஆதரவு திரட்டவும், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் அண்ணாமலையின் பிரசாரத்தின் போது அதிக அளவில் பங்கேற்பது எனவும், முடிவு செய்யப்பட்டது.
ஒன்றிய தலைவர் ஜானகிராமன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் கார்த்தி, குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

