/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த முடிவு
/
அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த முடிவு
அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த முடிவு
அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை வலியுறுத்தி ஊர்வலம் நடத்த முடிவு
ADDED : பிப் 24, 2025 10:44 PM

மேட்டுப்பாளையம்; அத்திக்கடவு இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலம் நடத்த உரிமை குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் அத்திக்கடவு அவிநாசி இரண்டாவது திட்ட உரிமை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு குழுவின் தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார்.
பவானி ஆற்று நீர் பாசன விவசாயிகள் சங்க தலைவர் துரைசாமி, தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேணுகோபால், பா.ஜ., மாவட்ட முன்னாள் தலைவர் சங்கீதா, முன்னாள் எம்.எல்.ஏ., அருண்குமார், முன்னாள் தாசில்தார் பழனிசாமி, பா.ஜ., பொதுக்குழு உறுப்பினர் பாண்டுரங்கன் உள்பட பலர், வருகிற தமிழக வேளாண் பட்ஜெட்டில், அத்திக்கடவு அவிநாசி இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது:
மேட்டுப்பாளையம் பவானி நதி கரையில் உள்ள நச்சு ஆலைகளால், பவானி நதிநீர் மாசுபடுகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பகுதியில் மனித மிருக மோதல் அதிகமாக உள்ளது. இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு, விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, அத்திக்கடவு அவிநாசி இரண்டாவது திட்டத்தை நிறைவேற்ற கோரி, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளடக்கிய பொதுமக்கள், அடுத்த மாதம், 12ம் தேதி மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஊர்வலமாக சுப்பிரமணியர் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுக்கு செல்வது.
அங்கு படித்துறையில் தண்ணீரில் மலர் தூவி, பவானி தாயிடம் (ஆற்றுத் தண்ணீரில்) கோரிக்கை மனுவை வழங்குவது என, கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.