/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் கட்டமைப்பு மேம்படுத்த முடிவு
/
அரசு பள்ளியில் கட்டமைப்பு மேம்படுத்த முடிவு
ADDED : ஆக 28, 2024 02:04 AM
கோவில்பாளையம்;அரசு பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த உள்ளதாக மேலாண்மை குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியை விமலா வரவேற்றார்.
பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, துணைத்தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் பாபு, பள்ளி மேலாண்மை குழுவின் பணிகள் குறித்து தெரிவித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி, பள்ளியில் தேவைப்படும் கட்டமைப்பு குறித்து பேசினார்.
பள்ளி மேலாண்மை குழு தலைவராக சுபா, துணை தலைவராக சுரேஷ், உள்பட 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, உறுதிமொழி ஏற்றனர். பள்ளியில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த முடிவு செய்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

