ADDED : மே 28, 2024 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;கோவை மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது; மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். துணை செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட பொருளாளர் முருகன், மேயர் கல்பனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வரும் ஜூன் 3ல், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவை, சிறப்பாக கொண்டாட வேண்டும், தேர்தல் நடத்தை விதிமுறையை கவனத்தில் கொள்ள வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணை செயலாளர் கல்பனா நன்றி கூறினார்.