தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெயிலால் வரத்து குறைவு :காய்கறி விலையில் மாற்றம்

வெயிலால் வரத்து குறைவு :காய்கறி விலையில் மாற்றம்

வெயிலால் வரத்து குறைவு :காய்கறி விலையில் மாற்றம்


ADDED : மார் 22, 2024 10:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2024 10:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, வெயில் சீதோஷ்ண நிலை காரணமாக, காய்கறிகள் வரத்து குறைந்த அளவே உள்ளது.

கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 220, கத்தரிக்காய் கிலோ - 23, முருங்கைகாய் - 15, வெண்டைக்காய் - 45, முள்ளங்கி - 10, வெள்ளரிக்காய் - 35, பூசணிக்காய் - 20, அரசாணிக்காய் - 25, பாகற்காய் - 40, புடலை - 18, சுரைக்காய் - 20, பீர்க்கங்காய் - 35, பீட்ரூட் - 35, அவரைக்காய் -- 55, பச்சை மிளகாய் - 55 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

விவசாயிகள் கூறுகையில், 'தக்காளி விலை பிப்ரவரி மாதம் (15 கிலோ பெட்டி) 380 ரூபாய்க்கு விற்றது. ஆனால் தற்போது, 220 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரே மாதத்தில் 160 ரூபாய் விலை சரிந்துள்ளது.

மேலும், கோடை காலம் துவங்குவதால், வெள்ளரிக்காய் விலை உயர்ந்துள்ளது. வெயிலில் காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது. வரும் நாட்களில் காய்கள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us