தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழை வரத்து குறைவு; விலையில் மாற்றம்

வாழை வரத்து குறைவு; விலையில் மாற்றம்

வாழை வரத்து குறைவு; விலையில் மாற்றம்


ADDED : ஜூன் 26, 2024 09:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2024 09:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் வாழை வரத்து, சென்ற வாரத்தை விட குறைவாக உள்ளது.

கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் வாழை வரத்து குறைந்ததால் வியாபாரிக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதில், இந்த வாரம் செவ்வாழை 65 (கிலோ), பூவன் - 35, நேந்திரன் - 60, கதளி - 50, சாம்பராணி வகை - 45, ரஸ்தாளி - 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இதில், சென்ற வாரத்தை விட தற்போது விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், கதளி - 10 (ஒரு கிலோ), ரஸ்தாளி - 20 ரூபாய் விலை சரிந்துள்ளது. நேந்திரன் - 5 மற்றும் பூவன் - 3 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கிணத்துக்கடவு மார்க்கெட்டில் இந்த வாரம் வாழை வரத்து சென்ற வாரத்தை விட குறைவாகவே இருந்தது. அனைத்து வகை வாழையும் சேர்த்து 30க்கும் குறைவான அளவே வாழை வரத்து இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us