தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கறி வரத்து குறைவு விலையில் மாற்றம்

காய்கறி வரத்து குறைவு விலையில் மாற்றம்

காய்கறி வரத்து குறைவு விலையில் மாற்றம்


ADDED : மே 12, 2024 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2024 10:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு, காய்கறிகளின் வரத்து குறைவாகவும், விலையில் மாற்றமும் காணப்பட்டது.

கிணத்துக்கடவில் முக்கிய மார்க்கெட்டாக தினசரி மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கள் வரத்து குறைந்த அளவே இருந்ததாகவும், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

காய்கள் விலை நிலவரம் குறித்து, வியாபாரிகள் கூறியதாவது:

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 300, தேங்காய் 16 (ஒன்று), கத்தரிக்காய் கிலோ, 30, முருங்கைகாய் -- 30, வெண்டைக்காய் - 50, முள்ளங்கி - 30, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 15, பாகற்காய் - 95, புடலை - 25, சுரைக்காய் - 26, பீர்க்கங்காய் - 100, பீட்ரூட் - 30, அவரைக்காய் - 65, பச்சை மிளகாய் - 70 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

கடந்த பத்து நாட்களுக்கு முன் இருந்த விலை மாறுபட்டுள்ளது. இதில், தக்காளி (15 கிலோ) 50 ரூபாய் விலை குறைந்துள்ளது. தேங்காய் 2 ரூபாயும், முள்ளங்கி,- 7ம், அரசாணிக்காய் 5ம், அவரைக்காய், 25 ரூபாய் விலை சரிந்துள்ளது.

முருங்கைக்காய், பீர்க்கங்காய், பச்சைமிளகாய் 10ம், வெண்டைக்காய், பாகற்காய், புடலை, பீட்ரூட் 5ம், சுரைக்காய் 6 ரூபாய் வரையிலும் விலை அதிகரித்துள்ளது. கோடையையொட்டி, நாளுக்கு நாள் காய்களின் விலை அதிகரித்து வருகிறது.

மேலும், வரத்தும் குறைந்து வருகிறது. கோடை முடிந்த பின், காய்களின் விலை குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு, வியாபாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us