/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி வாகனங்களில் குறைபாடு மீண்டும் சோதனைக்கு உத்தரவு
/
பள்ளி வாகனங்களில் குறைபாடு மீண்டும் சோதனைக்கு உத்தரவு
பள்ளி வாகனங்களில் குறைபாடு மீண்டும் சோதனைக்கு உத்தரவு
பள்ளி வாகனங்களில் குறைபாடு மீண்டும் சோதனைக்கு உத்தரவு
ADDED : மே 24, 2024 01:11 AM
கோவை;வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வருவாய் மற்றும் போலீஸ் துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் குறைகள் கண்டறியப்பட்ட பள்ளி வாகனங்களை மீண்டும் சோதனைக்குட்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவையிலுள்ள, 203 தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சொந்தமான 1,323 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
அதில், 44 பள்ளி வாகனங்களில் குறைகள் கண்டறியப்பட்டது. சரிசெய்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்த போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டது. குறைகள் கண்டறியப்பட்ட, 44 பள்ளி வாகனங்களில் 22 பள்ளி வாகனங்கள் மட்டுமே குறைகள் நிறைவு செய்யப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டு சான்றுகள் பெறப்பட்டுள்ளன.
மீதமுள்ள, 22 வாகனங்கள் குறைகள் நிறைவு செய்யப்படவில்லையா, சரியான ஆவணங்கள் இல்லையா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை, ஆய்வுக்குட்படுத்தப்படவும் இல்லை.
இதையடுத்து அப்பள்ளி வாகனங்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பட்டியலிட்டு பள்ளி திறக்க இரண்டு வார காலமே இருப்பதால் விரைவாக விடுபட்ட பணிகளை நிறைவு செய்து ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.