/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழுதானது வாஷிங்மெஷின் இழப்பீடு வழங்க உத்தரவு
/
பழுதானது வாஷிங்மெஷின் இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஏப் 25, 2024 06:35 AM
கோவை: வாஷிங்மெஷின் பழுதானதால் இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தவிட்டது.
கோவை, காந்திபுரம், 2வது வீதியை சேர்ந்தவர் ஜெயராஜ், அதே பகுதியிலுள்ள எலக்ட்ரிக் பொருட்கள் ேஷாரூமில், 2016 மார்ச் 20ல், வாஷிங் மெஷின், 26,300 ரூபாய்க்கு வாங்கினார். 10 ஆண்டு வாரன்டி வழங்கப்பட்டது. ஆனால், 2023ல் பழுது ஏற்பட்டது.
புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மெக்கானிக் சென்று, பில்டரை கிளீன் செய்து, 710 ரூபாய் கட்டணம் பெற்றார்.
சில நாட்கள் இயங்கிய, வாஷிங்மெஷின் மீண்டும் பழுதானதால், மோட்டார் மாற்றி கொடுத்தனர். அதற்காக மொத்தம், 10,126 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். அதன் பிறகும் வாஷிங் மெஷின் இயங்கவில்லை.
இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''வாஷிங் மெஷின் உற்பத்தி நிறுவனம், சேவை குறைபாடு செய்துள்ளதால், பழுது பார்க்க செலவழித்த தொகை, 10,126 ரூபாய் திரும்ப செலுத்த வேண்டும். மனஉளச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.

