/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் பதவி உயர்வுக்கு காத்திருப்போர் பாதிப்பு
/
புதிய நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் பதவி உயர்வுக்கு காத்திருப்போர் பாதிப்பு
புதிய நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் பதவி உயர்வுக்கு காத்திருப்போர் பாதிப்பு
புதிய நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் பதவி உயர்வுக்கு காத்திருப்போர் பாதிப்பு
ADDED : ஜூன் 26, 2024 10:54 PM
கோவை:புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிவில் நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால், பதவி உயர்வுக்கு காத்திருக்கும் நீதிபதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக நீதிமன்றங்களில் காலியாகவுள்ள, 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப,கடந்தாண்டு டிசம்பரில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தாண்டு பிப்ரவரியில், நேர்முக தேர்வு நடந்தது. தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆனால், தேர்வானவர்கள் பட்டியலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரித்த ஐகோர்ட், திருத்திய பட்டியலை வெளியிட உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, திருத்திய தேர்வானவர்கள் பட்டியலை, மார்ச் 19ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இந்த பட்டியலிலும், இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என்று, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்காக, வழக்கு நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை, நிரப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறையில், பல்வேறு நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு இடமாறுதலாகி சென்ற பணியிடங்கள் முழுவதும்,நீதிபதிகள் பற்றாக்குறையால் நிரப்பப்படவில்லை.
கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, சென்னை என பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும், 200க்கும் மேற்பட்ட மாஜிஸ்திரேட்கள், சப் - கோர்ட் நீதிபதிகள், பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர்.
புதிய பணியிடம் நிரப்ப கால தாமதம் ஏற்படுவதால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.புதிதாக தேர்வு செய்யப்பட்டோருக்கு, விரைவாக நியமன ஆணை வழங்கும் பட்சத்தில்,ஏற்கனவே பணியாற்றும் சப் - கோர்ட் நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு பதவி உயர்வு கிடைப்பதோடு, நீதிமன்ற காலிப்பணியிட பிரச்னைக்கும், தீர்வு கிடைக்கும்.