/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட் வளாகத்தில் இ- - பைலிங் சேவை மையம் திறப்பதில் தாமதம்
/
கோர்ட் வளாகத்தில் இ- - பைலிங் சேவை மையம் திறப்பதில் தாமதம்
கோர்ட் வளாகத்தில் இ- - பைலிங் சேவை மையம் திறப்பதில் தாமதம்
கோர்ட் வளாகத்தில் இ- - பைலிங் சேவை மையம் திறப்பதில் தாமதம்
ADDED : ஏப் 25, 2024 06:37 AM
கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில், இ-பைலிங் சேவை மையம் அமைக்கப்பட்டு, ஒரு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படவில்லை.
நீதிமன்றங்களில் வழக்குகள் நேரடியாக, தாக்கல் செய்யப்படும் நடைமுறை மாற்றப்பட்டு, இ- கோர்ட் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான வழக்குகளையும், இ- பைலிங் முறையில் தாக்கல் செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்தாண்டு செப்., முதல் புதிய நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இ-பைலிங் வாயிலாக, வழக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருப்பதால், நிறுத்தி வைக்க கோரி, வக்கீல் சங்கங்கள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
வக்கீல்களுக்கு முறையான பயிற்சி அளித்த பிறகே, இப்புதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில், வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுக்கு, இ-பைலிங் வழக்கு தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள சந்தேகம் மற்றும் சிக்கலுக்கு தீர்வு காண, கோவை நீதிமன்ற வளாகத்தில், ஆறு இடத்தில் தற்காலிக இ-பைலிங் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பணிகள் முடிந்த நிலையில், கடந்த மாதமே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இதுவரை திறக்கப்படவில்லை.

