/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சம்பளம் கொடுப்பதில் தாமதம்; பல்கலை ஆசிரியர் சங்கம் புகார்
/
சம்பளம் கொடுப்பதில் தாமதம்; பல்கலை ஆசிரியர் சங்கம் புகார்
சம்பளம் கொடுப்பதில் தாமதம்; பல்கலை ஆசிரியர் சங்கம் புகார்
சம்பளம் கொடுப்பதில் தாமதம்; பல்கலை ஆசிரியர் சங்கம் புகார்
ADDED : ஆக 22, 2024 12:39 AM
கோவை : பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும், ஈரோடு முதுநிலை விரிவாக்க மைய ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ஊதியம் சரியான நேரத்தில் வழங்க வலியுறுத்தி, உயர்கல்வித்துறை செயலருக்கு, பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், மனு அளிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களின் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் வகையில், ஈரோடு முதுநிலை விரிவாக்க மையம், 2013ம் ஆண்டு துவக்கப்பட்டது.
இதில், ஆறு முதுநிலை படிப்புகளில் மாணவர்கள் படிக்கின்றனர். 7 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான ஊதியம், சரியான நேரத்தில் பல்கலை தரப்பில் வழங்கப்படுவதில்லை என்று, கடந்த பல மாதங்களாக புகார் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, பல்கலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைத்தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், ''கடந்த மாதத்திற்கான ஊதியம், சற்று முன்புதான் 'கிரெடிட்' ஆனது. ஒவ்வொரு மாதமும் காலம் தாழ்த்துகின்றனர். ஊதியம் தாமதமாக விடுவிக்கப்படுவதால், பல்வேறு சிரமங்களை ஊழியர்கள் எதிர்கொள்கின்றனர். மாதந்தோறும் சரியான நேரத்தில் ஊதியம் விடுவிக்க வேண்டும்,'' என்றார்.