/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மும்முனை மின் இணைப்பு தாமதம்: தொழில்முனைவோர்கள் புகார்
/
மும்முனை மின் இணைப்பு தாமதம்: தொழில்முனைவோர்கள் புகார்
மும்முனை மின் இணைப்பு தாமதம்: தொழில்முனைவோர்கள் புகார்
மும்முனை மின் இணைப்பு தாமதம்: தொழில்முனைவோர்கள் புகார்
ADDED : மார் 07, 2025 08:13 PM
அன்னுார்:
மும்முனை மின் இணைப்புக்கு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
அன்னுார் வட்டாரத்தில், அன்னுார், கரியாம்பாளையம், பொன்னே கவுண்டன்புதுார், பசூர், வடக்கலுார் ஆகிய ஊர்களில் உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன.
50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளும், 5,000க்கும் மேற்பட்ட மும்முனை மின் இணைப்புகளும் உள்ளன.
கரியாம்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தெலுங்கு பாளையம், கரியாம்பாளையம், பிள்ளையப்பம்பாளையம் பகுதிகளில் மும்முனை மின் இணைப்பு வழங்க தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து தொழில் முனைவோர் கூறுகையில், 'பிள்ளையப்பம்பாளையம் ஊராட்சி, தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதியாகும். எனவே இங்கு நிறுவனம் துவக்கி, மும்முனை மின் இணைப்புக்கு மின் கம்பம் தள்ளி நடுவதற்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தி ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை மின் இணைப்பு தரப்படவில்லை.
கரியாம்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு பல மாதங்களாக அலைந்து வருகிறோம்,' என்றனர்.
இதுகுறித்து கரியாம்பாளையம் மின் வாரிய (கூடுதல் பொறுப்பு) உதவி மின் பொறியாளர் கூறுகையில், ''வீட்டு மின் இணைப்புக்கு விண்ணப்பித்த நான்கு நாட்களுக்குள் வழங்கப்படுகிறது.
மும்முனை மின் இணைப்பு விரைவில் வழங்கப்படுகிறது. கம்பம் மாற்றி நடப்பட வேண்டி இருந்தால் சற்று தாமதமாகும்,'' என்றார்.