/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெளிமாவட்ட அரசு அலுவலர்களின் தபால் ஓட்டுகள் திருச்சியில் ஒப்படைப்பு
/
வெளிமாவட்ட அரசு அலுவலர்களின் தபால் ஓட்டுகள் திருச்சியில் ஒப்படைப்பு
வெளிமாவட்ட அரசு அலுவலர்களின் தபால் ஓட்டுகள் திருச்சியில் ஒப்படைப்பு
வெளிமாவட்ட அரசு அலுவலர்களின் தபால் ஓட்டுகள் திருச்சியில் ஒப்படைப்பு
ADDED : ஏப் 18, 2024 04:33 AM
கோவை,: கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும், வேறு மாவட்டங்களை சேர்ந்த, 4,546 ஊழியர்கள் செலுத்திய தபால் ஓட்டுகள், போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில், தேர்தல் பணியில், 15 ஆயிரத்து, 805 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 7,228 அலுவலர்கள், அவர்கள் பணிபுரியும் ஓட்டுச்சாவடிகளில் மின்னணு ஓட்டுப்பதிவு செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற அலுவலர்கள், தபால் ஓட்டுகள் போடுவதற்கு படிவம் வழங்கப்பட்டிருக்கிறது. கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் அறை முன் வைத்துள்ள பெட்டியில், இன்று (18ம் தேதி) மாலை வரை செலுத்தலாம்.
தேர்தல் பணியில் ஈடுபடும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த, 4,546 அலுவலர்கள் செலுத்திய தபால் ஓட்டுகளை, நோடல் ஆபீசரான டி.ஆர்.ஓ., அபிராமி தலைமையிலான குழுவினர், போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு, நேற்று கொண்டு சென்றனர்.
கோவையில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்கள், எந்தெந்த தொகுதிகளுக்கு தபால் ஓட்டு செலுத்தினார்களோ, அவற்றை ஒப்படைத்தனர்.
மற்ற மாவட்டங்களில் தேர்தல் பணியில் ஈடுபடும், கோவை லோக்சபா தொகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் செலுத்தியதில், நேற்று மாலை வரை, 1,046 தபால் ஓட்டுகளே பெறப்பட்டன.
திருவள்ளூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து, தபால் ஓட்டுகள் வந்து சேராததால், கோவையில் இருந்து சென்ற அலுவலர்கள், திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

