/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க கோரிக்கை
/
கட்டுமான தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க கோரிக்கை
கட்டுமான தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க கோரிக்கை
கட்டுமான தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி செலவை வாரியமே ஏற்க கோரிக்கை
ADDED : ஆக 25, 2024 10:34 PM

கோவை:கோவை மண்டல கட்டுமான தொழிலாளர் எச்.எம்.எஸ்., சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சிங்காநல்லுாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடந்தது.
சங்க தலைவர் ராஜாமணி தலைமையிலும், பொதுச்செயலாளர் மனோகரன் முன்னிலையிலும் நடந்த கூட்டத்தில், 2024-26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, தலைவராக ராஜாமணி, செயல் தலைவராக பழனிசாமி, பொதுச்செயலாளராக மனோகரன், பொருளாளராக பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், 'நலவாரிய ஆன்லைன் 'சர்வர்' சரிவர இயங்காத நிலை உள்ளது. எனவே, உறுப்பினர்கள் பதிவுக்கான தடைகள் களையப்பட்டு, உரிய தீர்வு காண வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்ய, கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை, ரத்து செய்ய வேண்டும்.
மாதம்தோறும், 10ம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற தொழிலாளர் குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதையும், வாரியமே ஏற்க வேண்டும்.
வாரியம் மூலம் வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும். சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தீபாவளி 'போனஸ்' ஆக, குறைந்தபட்சம் ரூ.7,000 வாரியம் சார்பில் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

