ADDED : மே 30, 2026 06:42 PM
அ நிறம் | அளவு
கோவை: சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ள மும்மொழிக் கொள்கையை கண்டித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் கூறுகையில், ‘‘தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சமே ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக் கல்வியை வழங்குவதாகும். பெரும்பாலான பள்ளிகள் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை,’’ என்றார்.
