ADDED : மே 23, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:பிரதமர் மோடி, ஒடிசா மாநில தேர்தல் பிரசாரத்தின் போது தமிழர்கள் மீது அவதுாறு பரப்பும் வகையில் பேசியதாக, பொள்ளாச்சி குமரன் நகரில், தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்ட திட்டத் திருத்தக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, மோடியின் உருவப் படத்தை எரித்து, கண்டனம் தெரிவித்தனர். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் அமுதபாரதி, நகராட்சி துணைத் தலைவர் கவுதமன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

