/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 10, 2024 11:47 PM
மேட்டுப்பாளையம்;ஜனவரி மாதம் நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடுகளை, தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின், மேட்டுப்பாளையம் வட்டக் கிளை சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தாசில்தார் அலுவலகம் முன், கருப்பு பேட்ச் அணிந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். கூட்டமைப்பின் நிர்வாகி தனசீலன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் போட்டார்.
கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி நடந்த பேச்சுவார்த்தை உடன்பாடுகளை, தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு, பிற மாநிலங்களைப் போல் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதற்குரிய உபகரணங்கள் மற்றும் தொகையை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் பேசினர். கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி நன்றி கூறினார்.
____