/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி இடத்தில் உடற்பயிற்சி கூடம் கட்டணம் நிர்ணயித்ததால் ஆர்ப்பாட்டம்
/
மாநகராட்சி இடத்தில் உடற்பயிற்சி கூடம் கட்டணம் நிர்ணயித்ததால் ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி இடத்தில் உடற்பயிற்சி கூடம் கட்டணம் நிர்ணயித்ததால் ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி இடத்தில் உடற்பயிற்சி கூடம் கட்டணம் நிர்ணயித்ததால் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 01, 2024 11:40 PM

கோவை:மாநகராட்சி இடத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு, கட்டணம் நிர்ணயிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை நேரு விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இவ்விடத்தில், பல ஆண்டுகளாக வ.உ.சி., உடற்பயிற்சி சாலை சார்பில், உடற்பயிற்சிக் கூடம் நடத்தப்பட்டு வருகிறது.
இங்கு போலீஸ் தேர்வுக்கு செல்வோர், விளையாட்டுகளில் ஈடுபடுவோர், ஓய்வு பெற்ற போலீஸ் அலுவலர்கள் என, பலரும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பில், இந்த உடற்பயிற்சி கூடத்துக்கு கட்டணமாக, ரூ.300 நிர்ணயிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இதைக்கண்டித்து, உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வரும் வ.உ.சி., உடற்பயிற்சி சாலையை சேர்ந்தவர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் கூறியதாவது:
மாநகராட்சி இடத்தை மட்டுமே வழங்கியது. அதில் கட்டடம் கட்டி, தேவையான அனைத்து கருவிகளையும் வங்கிக்கடன் வாயிலாக வாங்கி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறோம்.
இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. பயிற்சியாளரே இங்கு தேவையில்லை. இதுவரை, பயிற்சியாளர் இல்லாமல், தான் உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது.
ஏழை மாணவர்களின் வாழ்வில், மாநகராட்சி விளையாடுகிறது. உதவி கமிஷனரிடம் முறையிட்ட போது, கருவிகளை எடுத்து செல்லுங்கள் எனக்கூறுகிறார். இத்தனை ஆண்டுகள், கருவிகள் வாங்கி, உடற்பயிற்சி கூடத்தை பராமரித்தது, குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது நாங்கள் தான்.
குடிநீர், மின்கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்தியுள்ளோம். நாங்கள் கட்டணம் வசூலிக்காத நிலையில், மாநகராட்சிக்கு எப்படி கட்டணம் செலுத்துவது. இத்தனை காலம் உடற்பயிற்சிக் கூடத்தை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம், தற்போது கட்டணம் வசூலிப்பது ஏன்.
இவ்வாறு, அவர் கேள்வி எழுப்பினார்.