/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இயற்கை களைக்கொல்லி தயாரிக்க செயல்விளக்கம்
/
இயற்கை களைக்கொல்லி தயாரிக்க செயல்விளக்கம்
ADDED : மே 01, 2024 12:20 AM

அன்னூர்;இயற்கை களைக்கொல்லி தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பொங்கலூரில், விவசாயி கோபால் தோட்டத்தில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை மாணவியர் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தில் இயற்கை களை கொல்லி தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
மாணவியர் பேசுகையில்,'எளிய முறையில் இயற்கையாக கிடைக்கும் எலுமிச்சை பழம், கல் உப்பு, தண்ணீர், கோமியம் ஆகியவற்றை பயன்படுத்தி இயற்கை களை கொல்லி தயாரிக்கலாம். இயற்கை களைக்கொல்லி தெளித்தால், 30 நிமிடத்தில் களைகளை கருகச் செய்து விடும். அனைத்து விதமான களைகளையும் அழிக்கும் தன்மை கொண்டது,' என்றனர். செயல் விளக்கத்தில் அப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.