/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னை டானிக் குறித்து செயல்விளக்கம்
/
தென்னை டானிக் குறித்து செயல்விளக்கம்
ADDED : மே 12, 2024 10:49 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆழியாறில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை இறுதியாண்டு தோட்டக்கலை மாணவியர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ், சாகுபடி மற்றும் அறுவடை குறித்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
சோமந்துறை சித்துார் பகுதி விவசாயிகளுக்கு, 'தென்னை டானிக்' நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து மாணவியர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மாணவியர் பேசியதாவது: வேளாண் பல்கலையில் விற்கப்படும் தென்னை டானிக் பயன் உள்ளதாக இருக்கிறது.ஒரு லிட்டர் அடர் திரவ தென்னை டானிக் உடன், நான்கு லிட்டர் நீர் சேர்த்து, ஐந்து லிட்டர் அளவு தயாரிக்க வேண்டும்.
பின்னர், ஒரு மரத்தின் அடி தண்டிலிருந்து, 2.5 - 3 அடி தள்ளி உறிஞ்சும் வேர்கள் அதிகளவில் காணப்படும் பகுதியில், ஓர் அடி வரை மண்ணை பறிக்க வேண்டும்.
பென்சில் கனமுள்ள இளஞ்சிவப்பு வேரை தேர்வு செய்து, நுனிப்பகுதியை கத்தியால் சீவ வேண்டும்.
தென்னை டானிக்குள் பையில் வேரின் அடிவரை நுழைத்து கட்டவும்; ஒரு மரத்துக்கு, 200 மி.லி., விகிதம் ஆண்டுக்கு இருமுறை வேர்வாயிலாக செலுத்த வேண்டும். 1 - 2 நாட்களில், 200 மி.லி., ஊட்டச்சத்து, மரத்தின் மேல் பகுதி வரை சென்றடையும். அதன் பிறகு பாலித்தீன் பையை அகற்றி மண்ணை அணைத்து விட வேண்டும்.
இவ்வாறு ஆறு மாதத்துக்கு ஒரு முறை செலுத்துவதால் எளிதில் வேரின் வாயிலாக ஊடுருவிச்சென்று மரத்தின் உயிர் வேதியியல் செயல்பாடுகளில் சேதம் விளைவிக்காமல் மரத்துக்கு தேவையான சரிவிகித ஊட்டசத்துக்களையும் பெற்றுத்தருகிறது.
20 சதவீகிதம் வரை மகசூல் அதிகரிக்கிறது. இவ்வாறு, தெரிவித்தனர்.