/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெங்கு காய்ச்சல் பரவல் :உள்ளாட்சி நிர்வாகம் எச்சரிக்கை
/
டெங்கு காய்ச்சல் பரவல் :உள்ளாட்சி நிர்வாகம் எச்சரிக்கை
டெங்கு காய்ச்சல் பரவல் :உள்ளாட்சி நிர்வாகம் எச்சரிக்கை
டெங்கு காய்ச்சல் பரவல் :உள்ளாட்சி நிர்வாகம் எச்சரிக்கை
ADDED : மே 21, 2024 11:17 PM
பெ.நா.பாளையம்;டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.
கோவையில் மழை தீவிரம் அடைந்துள்ளதால், தெருக்கள், சாக்கடைகள், குளம், குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீரில் டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏ.டி.எஸ்., கொசுக்கள் பெருகுவதற்கான நிலை உருவாகியுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது வீடுகள், வணிக வளாகங்கள், பணிபுரியும் அலுவலகங்கள், கடைகளில் நீர் தேங்கும் பகுதிகளை அடிக்கடி சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபடும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என, உள்ளாட்சி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன.

