/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளி பொறியாளருக்கு கலெக்டரை சந்திக்க அனுமதி மறுப்பு
/
மாற்றுத்திறனாளி பொறியாளருக்கு கலெக்டரை சந்திக்க அனுமதி மறுப்பு
மாற்றுத்திறனாளி பொறியாளருக்கு கலெக்டரை சந்திக்க அனுமதி மறுப்பு
மாற்றுத்திறனாளி பொறியாளருக்கு கலெக்டரை சந்திக்க அனுமதி மறுப்பு
ADDED : ஆக 07, 2024 11:16 PM

கோவை, - வேலை வாய்ப்பு கேட்டு கலெக்டரை சந்திக்க முயற்சிக்கும் பட்டதாரி இளைஞருக்கு, ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
பெ.நா.பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், பி.டெக்., தகவல் தொழில்நுட்பம் படித்த மாற்றுத்திறனாளி. வேலை வாய்ப்பு கேட்டு கலெக்டரை சந்திக்க, தொடர்ந்து வருகை தந்து கொண்டே இருக்கிறார்.
ஆனால் கலெக்டர் அலுவலக அதிகாரிகள், அவரை துறை வாரியாக மாற்றி, மாற்றி அலைக்கழிக்கின்றனரே தவிர, கலெக்டரை சந்திக்க வாய்ப்பு கொடுப்பதில்லை என்று வேதனையுடன் கூறுகிறார்.
இது குறித்து, செந்தில்குமார் கூறியதாவது:
எனக்கு ஏதாவது ஒரு துறையில், வேலை வாய்ப்புக்கோ, சுய தொழிலுக்கோ வழிவகை செய்து கொடுக்க வேண்டும். இதற்காக கலெக்டரை சந்திக்க, பல முறை முயற்சித்து விட்டேன்.
ஆனால் அதிகாரிகள் மனுவை மட்டும் பெற்றுக்கொள்கின்றனர். மாற்றி மாற்றி அலைக்கழிக்கின்றனர். எப்படியாவது கலெக்டரை சந்திக்க வேண்டும். வேலை வாய்ப்பை பெற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.