/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விநாயகர் சிலை வைக்க இ.ம.க.,வுக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி விழா நடத்த முடிவு
/
விநாயகர் சிலை வைக்க இ.ம.க.,வுக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி விழா நடத்த முடிவு
விநாயகர் சிலை வைக்க இ.ம.க.,வுக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி விழா நடத்த முடிவு
விநாயகர் சிலை வைக்க இ.ம.க.,வுக்கு அனுமதி மறுப்பு; தடையை மீறி விழா நடத்த முடிவு
ADDED : செப் 05, 2024 12:07 AM
அன்னுார் : அன்னுார் வட்டாரத்தில், விநாயகர் சிலை வைக்க, இந்து மக்கள் கட்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
அன்னுார் வட்டாரத்தில், இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். இந்து முன்னணி சார்பில், அன்னுார் வட்டாரத்தில் 45 இடங்களில், வரும் 7ம் தேதி விநாயகர் பிரதிஷ்டை செய்ய அனுமதி பெற்றுள்ளனர். வரும் 9ம் தேதி விசர்ஜன ஊர்வலம் நடத்தி சிறுமுகை அருகே ஆற்றில் கரைக்க உள்ளனர்.
இந்து மக்கள் கட்சி சார்பில், 28 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட, அன்னுார் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மூன்று வாரங்களுக்கு முன் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
அனுமதி கிடைக்காத நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நான்கு நாட்களுக்கு முன் அன்னுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசார் தரப்பில் உங்களது விண்ணப்பங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிறோம் என உறுதி அளித்தவுடன் இந்து மக்கள் கட்சியினர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று 'இந்து மக்கள் கட்சியினர், விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை,' என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு குழு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த ஆண்டு அனுமதி தராத போது கோர்ட்டுக்கு சென்றோம். அப்போது போலீசார் கோர்ட்டில் வழக்கு இருப்பதால் அனுமதி இல்லை என்று கூறினர்.
எனவே இந்த ஆண்டு அனுமதி கோரி கோர்ட்டில் வழக்கு தொடராமல் முறையாக விண்ணப்பித்தோம். ஆனால் அனுமதி தரவில்லை. எனினும் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து விழா நடத்தப்படும், என்றார்.