/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இருதயவியல் துறை டாக்டர்கள் கருத்தரங்கு
/
இருதயவியல் துறை டாக்டர்கள் கருத்தரங்கு
ADDED : ஆக 25, 2024 10:31 PM
கோவை:'கார்டியாலஜிகல் சொசைட்டி ஆப் கோவை' சார்பில், இருதயவியல் துறை வருடாந்திர கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் உயர் ரத்த அழுத்தம் மேலாண்மை, சிறுவயதில் திடீர் இருதய பிரச்னையால் ஏற்படும் மரணங்கள், இருதய நோய் உள்ளவர்களை எவ்வாறு குணப்படுத்துவது, கடுமையான நுரையீரல் பிரச்னைகளை எவ்வாறு கண்டறிந்து சிகிச்சை அளிப்பது போன்ற, பல்வேறு தலைப்புகளில் இருதயவியல் நிபுணர்கள் பேசினர்.
இதய மருத்துவம் சம்பந்தமாக நடந்த போட்டிகளில், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மாணவர் பிரனேஷ் முதலிடம் பிடித்தார். நிகழ்ச்சியில் இதயவியல் துறையில் சிறந்து விளங்கிய டாக்டர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து, இருதயவியல் துறை டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் என, 300-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

