/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துணை பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
/
துணை பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 08, 2024 11:29 PM
அன்னுார்;துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (பொது) விஜயகுமார், கோவை மகளிர் திட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் பொள்ளாச்சி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சொல்லமுத்து சர்க்கார் சாமக்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்னுார் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சொர்ண வேலம்மாள், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு, துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (தணிக்கை) மாற்றப்பட்டுள்ளார். அவருடைய இடத்தில் காரமடை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தினி குமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்னுார் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) கீதா வாணி, பெரியநாயக்கன்பாளையம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (நிர்வாகம்) மாற்றப்பட்டுள்ளார். அவருடைய இடத்தில் சுல்தான் பேட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மகளிர் திட்ட கண்காணிப்பாளர் அம்மு, அன்னுாரில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (100 நாள் வேலை திட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.