/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈ கட்டுப்பாடு முறை: வேளாண் மாணவர்கள் விளக்கம்
/
வெள்ளை ஈ கட்டுப்பாடு முறை: வேளாண் மாணவர்கள் விளக்கம்
வெள்ளை ஈ கட்டுப்பாடு முறை: வேளாண் மாணவர்கள் விளக்கம்
வெள்ளை ஈ கட்டுப்பாடு முறை: வேளாண் மாணவர்கள் விளக்கம்
ADDED : ஏப் 30, 2024 01:45 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, உயிரியல் முறையில் ருகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்பாடு முறை குறித்து வேளாண் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
பொள்ளாச்சி அருகே, சுப்பேகவுண்டன்புதுாரில் கோவை வேளாண் பல்கலை நான்காம் ஆண்டு மாணவர்கள், கிராமப்புற வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ், ருகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப்பொறி சீட்டு, 5அடிக்கு 1.5 அடி என்ற அளவில், இரண்டு மரங்களுக்கு இடையே வைக்க வேண்டும். அதில், ஒட்டும் திறன் கொண்ட விளக்கெண்ணெய், இன்ஜின் கிரீஸ், ஆயில் தடவ வேண்டும். எண்ணெய் தடவிய ஒட்டு பொறியில் பறக்க கூடிய வெள்ளை ஈக்கள் அதன் மேல் ஒட்டி இறந்துவிடும்.
மூன்று நாட்களுக்கு ஒரு முறை மஞ்சள் ஒட்டு பொறியை சுத்தம் செய்து எண்ணெய் தடவ வேண்டும். இந்த மஞ்சள் ஒட்டு பொறியினை, ஒரு ஏக்கருக்கு, எட்டு முதல், 10 இடங்களில் வைக்க வேண்டும் என, மேலாண்மை முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

