/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யானைகள் முகாமில் மேம்பாட்டு பணி ஷவர், கூடாரம் அமைக்கப்படுகிறது
/
யானைகள் முகாமில் மேம்பாட்டு பணி ஷவர், கூடாரம் அமைக்கப்படுகிறது
யானைகள் முகாமில் மேம்பாட்டு பணி ஷவர், கூடாரம் அமைக்கப்படுகிறது
யானைகள் முகாமில் மேம்பாட்டு பணி ஷவர், கூடாரம் அமைக்கப்படுகிறது
ADDED : ஜூன் 24, 2024 10:51 PM
பொள்ளாச்சி;ஆனைமலை அருகே, டாப்சிலிப் பகுதியில், 5 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில், 27 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. யானைகளின் வயது, எடை மற்றும் அதன் பணிக்கு ஏற்றாற்போல், தினமும், உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசு வாயிலாக, 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அதன்படி, முகாமில், யானைகளுக்கான கூடாரம், தடுப்பணை, கரோல், சிகிச்சை மையம், யானைகள் குளிக்க ஷவர் என, பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பாகன் மற்றும் காவடிகளுக்கு, 47 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
வனத்துறையினர் கூறியதாவது:
வார இறுதி நாட்களில், டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதேபோல, வனத்துறைக்கு சொந்தமான விடுதிகளில் தங்கவும், முனைப்புடன் முன்பதிவு செய்கின்றனர்.
இதனால், சுற்றுலாப் பயணியருக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டும் வருகின்றன. முகாமில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றால், வளர்ப்பு யானைகளைக் காண, கூடுதலாக சுற்றுலாப் பயணியர் வருகை புரிவர். இதனால், குறுகிய காலத்தில், பணிகளை விரைந்து முடிக்க, திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.