/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
/
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
ADDED : மார் 31, 2024 10:12 AM

தொண்டாமுத்தூர்: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையின் உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசன் தரிசிக்க கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால், நாள்தோறும், நூற்றுக்கணக்கான பக்தர்களும், வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் மலையேறி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை, முகப்பேரை சேர்ந்த ரகுராம்,50 என்பவர் தனது நண்பர்கள் 15 பேருடன், பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளார். 5வது மலை ஏறிக் கொண்டிருக்கும்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்து.
இதனையடைத்து, டோலி தூக்குபவர்கள் சென்று, ரகுராமை அடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். அங்கு பரிசோதனை செய்த 108 மருத்துவ பணியாளர்கள், உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

