தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


ADDED : மே 28, 2024 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 10:35 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலுார்:கண்ணம்பாளையம் மஹாலட்சுமி கோவிலில், தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கண்ணம்பாளையம் ஸ்ரீ மஹாலட்சுமி அம்மன் கோவில், 100 ஆண்டுகள் பழமையானது. இங்கு ஆண்டு விழாவை ஒட்டி, கடந்த ஒரு வாரமாக சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன.

நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்திருக்க, அவர்களின் தலையில் தேங்காய்களை பூஜாரி உடைத்தார். அதன் பின் அம்மனுக்கு பூஜைகள் நடந்தன.

பக்தர்கள் கூறுகையில், 'தலையில் தேங்காய் உடைத்து வழிபடுவதால், எங்கள் தலையெழுத்து மாறும் என்ற நம்பிக்கையில் இதை செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினோம்' என்றனர்.

தலையில் காயமடைந்தவர்களுக்கு, மஞ்சள் பூசப்பட்டது. மாலையில், மூத்தோர் வழிபாட்டுடன் விழா நிறைவு பெற்றது.

விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us