/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
/
பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
ADDED : ஆக 25, 2024 10:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் ரோட்டில், மாநகராட்சி துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு, பீளமேடு ஆரம்ப சுகாதார நிலையம், சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் சகுந்தலா கூறுகையில் ''எங்கள் பள்ளியில், 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவது வழக்கம். பீளமேடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், நர்ஸ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், 70 மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினர்,'' என்றார்.

