/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பில்லுார் அணையை துார்வார மாநகராட்சி நிர்வாகம் முடிவு
/
பில்லுார் அணையை துார்வார மாநகராட்சி நிர்வாகம் முடிவு
பில்லுார் அணையை துார்வார மாநகராட்சி நிர்வாகம் முடிவு
பில்லுார் அணையை துார்வார மாநகராட்சி நிர்வாகம் முடிவு
ADDED : மே 01, 2024 11:41 PM
கோவை : மழை இல்லாததால் நீர் மட்டம் வேகமாக சரிந்துவரும் நிலையில், பில்லுார் அணையை துார்வார நகராட்சி நிர்வாகத்திடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவை மக்களுக்கு சிறுவாணி, பில்லுார், ஆழியாறு உள்ளிட்டவை முக்கிய நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. தற்போது, மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. நேற்றைய நிலவரப்படி, 11.15 அடியாக நீர் மட்டம் இருந்தது.
இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று முன்தினம், சிறுவாணி அணைப்பகுதிக்கு சென்று, கோவைக்கு கேரளா தரப்பில் இருந்து முறையாக தண்ணீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
சிறுவாணியில் இருந்து தினமும், 3 கோடி லிட்டர் தண்ணீரை ஜூன் இரண்டாவது வாரம் வரை வழங்கும் வகையில் திட்டமிட்டு, கேரள அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.
சிறுவாணி அணையை துார்வாரும் அவசியம், தற்போதைக்கு இல்லை. பில்லுார் அணையை துார்வார திட்டமிட்டுள்ளோம். கடந்த வாரம்கூட, நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் பில்லுார் அணையை துார்வாருவது தொடர்பாக கேட்டுள்ளனர். இது தொடர்பாக திட்ட அறிக்கை அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

