/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளலுார் அரசுப்பள்ளியில் வைர விழா நினைவு நுழைவாயில்
/
வெள்ளலுார் அரசுப்பள்ளியில் வைர விழா நினைவு நுழைவாயில்
வெள்ளலுார் அரசுப்பள்ளியில் வைர விழா நினைவு நுழைவாயில்
வெள்ளலுார் அரசுப்பள்ளியில் வைர விழா நினைவு நுழைவாயில்
ADDED : ஜூன் 30, 2024 11:39 PM

போத்தனூர்;வெள்ளலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த, 1961ல் துவக்கப்பட்டது. 60 ஆண்டுகள் கடந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதனையொட்டி, முன்னாள் மாணவர்கள் இணைந்து, வைர விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
ரூ.40 லட்சம் மதிப்பில், நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. மேலும் கோவை வடக்கு ரவுண்டு டேபிள் - -20 சார்பிலும், ரூ.40 லட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டு, கடந்தாண்டு பயன்பாட்டிற்கு வந்தன.
இதன் தொடர்ச்சியாக, ரூ.20 லட்சம் செலவில் சிறு பணிகள் மற்றும் வைர விழா நினைவு நுழைவாயில் அமைக்கும் பணி நடந்தது. நேற்று இதன் திறப்பு விழா மற்றும் வைர விழா புத்தகம் வெளியீடு நடந்தது.
பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துகுமார் புத்தகத்தை வெளியிட, வைர விழா குழு தலைவர் பாலதண்டபானி மற்றும் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர். மதியம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.