/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அவரென்ன வானத்துல இருந்து குதிச்சாரா?' கோவை மேயரை காய்ச்சி எடுத்த பூச்சி முருகன்
/
'அவரென்ன வானத்துல இருந்து குதிச்சாரா?' கோவை மேயரை காய்ச்சி எடுத்த பூச்சி முருகன்
'அவரென்ன வானத்துல இருந்து குதிச்சாரா?' கோவை மேயரை காய்ச்சி எடுத்த பூச்சி முருகன்
'அவரென்ன வானத்துல இருந்து குதிச்சாரா?' கோவை மேயரை காய்ச்சி எடுத்த பூச்சி முருகன்
ADDED : ஏப் 02, 2024 11:55 PM
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு, பொறுப்பாளராக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவருமான பூச்சி முருகனை தி.மு.க.,தலைமை நியமித்துள்ளது.
தொண்டாமுத்துாரில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் அதில் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில், பூச்சி முருகன் பேசிய பேச்சு பற்றி, கோவை தி.மு.க.,வினரிடையே பரபரப்பான தகவல்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
அதில் பேசிய பூச்சி முருகன், பெரும் கொந்தளிப்போடு பேசி, கோவை மேயர் மற்றும் கவுன்சிலர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.
அவர் பேசுகையில், ''கட்சித் தலைமை இந்தத் தொகுதிக்கு என்னைப் பொறுப்பாளராக நியமித்துள்ளது. நானும் ஒரு வாரமாக இங்கிருந்து, பகுதி பகுதியாகக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறேன். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி, குனியமுத்துார், சுகுணாபுரம், தொண்டாமுத்துார் என, இதுவரை நான்கு கூட்டங்களை நடத்தி விட்டேன். ஆனால், ஒரு கூட்டத்துக்கும் கூட, கோவை மேயர் கல்பனா எட்டியே பார்க்கவில்லை.
''தேர்தல் நேரத்தில் கூட, கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காத அளவுக்கு அவர் என்ன வேலை பார்க்கிறார்... அவரென்ன வானத்திலிருந்து குதித்தாரா... கட்சிக்காரன் வேலை பார்க்காமல் அவரால் ஜெயித்திருக்க முடியுமா... நான் இங்குள்ள சூழ்நிலையை அப்படியே தலைமைக்குத் தெரிவிப்பேன்,'' என்று பேச, கைதட்டலும் விசிலும் பறந்துள்ளது.
கோவை தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''கோவை மேயர் எப்போதுமே கட்சி நிர்வாகி யாரையுமே மதிப்பதில்லை. கட்சி நிகழ்ச்சி எதிலும் பங்கேற்பதுமில்லை. பூச்சி முருகன் இதை வெளிப்படையாக உடைத்துப் பேசியதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்' என்றனர்.

