/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மலைக்கோவிலில் டிஜிட்டல் சர்வே கருவி; பக்தர்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் ஆலோசனை
/
மலைக்கோவிலில் டிஜிட்டல் சர்வே கருவி; பக்தர்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் ஆலோசனை
மலைக்கோவிலில் டிஜிட்டல் சர்வே கருவி; பக்தர்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் ஆலோசனை
மலைக்கோவிலில் டிஜிட்டல் சர்வே கருவி; பக்தர்கள் எதிர்ப்பால் அதிகாரிகள் ஆலோசனை
ADDED : டிச 09, 2024 10:52 PM
கிணத்துக்கடவு ; கிணத்துக்கடவு, கனகிரி வேலாயுத சுவாமி கோவிலில் டிஜிட்டல் சர்வே கருவி பொருத்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிணத்துக்கடவில் உள்ள கனககிரி வேலாயுத சுவாமி கோவில் மிகவும் பழமையானது. இக்கோவிலில் தினம்தோறும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது. மேலும், தைப்பூசம் போன்ற விசேஷ காலங்களில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் அதிக அளவு இருக்கும்.
தற்போது, இந்த கோவிலில், அரசு உத்தரவு மற்றும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் அனுமதியின் பேரில், மலைக்கோவில் மேல்பகுதியில் டிஜிட்டல் சர்வே கருவி பொருத்தப்படுகிறது.
இதற்கு, மாவட்ட சர்வே துறை மற்றும் கிணத்துக்கடவு வருவாய்த் துறையினர் இணைந்து கனககிரி வேலாயுத சுவாமி கோவில் மேல் பகுதியில் இடத்தை தேர்வு செய்வது ஆய்வு செய்தனர்.
இதைக் கண்ட பக்தர்கள், கோவில் வளாகத்தில் சர்வே கருவி அமைத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு மாற்று இடத்தை தேர்வு செய்து சர்வே கருவி அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், அதிகாரிகள் தேர்வு செய்த இடத்தில் சர்வே கருவி அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் டிஜிட்டல் சர்வே முறையை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில், 70 இடங்களில் டிஜிட்டல் சர்வே கருவியை பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கோவை மாவட்டத்தில் அன்னூர், கிணத்துக்கடவு, வால்பாறை போன்ற இடங்களில் டிஜிட்டல் சர்வே கருவியை பொருத்தி, 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு டிஜிட்டல் முறையில் சர்வே செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவுப்படியே இங்கு கருவியை அமைக்க பணிகளை துவங்கினோம்.
இவ்வாறு, கூறினர்.
ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கூறுகையில், 'டிஜிட்டல் சர்வே கருவியை கோவில் வளாகத்தில் அமைக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, கோவில் டிரஸ்டியிடம் முறையிட்டு தீர்வு காணப்படும்,' என்றனர்.

