/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் : சுட்டிக் குழந்தைகளின் மூளைக்கு தீனி!
/
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் : சுட்டிக் குழந்தைகளின் மூளைக்கு தீனி!
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் : சுட்டிக் குழந்தைகளின் மூளைக்கு தீனி!
தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் : சுட்டிக் குழந்தைகளின் மூளைக்கு தீனி!
UPDATED : ஆக 17, 2024 01:57 AM
ADDED : ஆக 17, 2024 01:08 AM

இக்கால குழந்தைகளின் அறிவுத்திறனை பலரும் வியந்து பார்க்கிறோம். இதில், பல குழந்தைகள் ஒரு வயது, ஒன்றரை வயது குழந்தைகள் எல்லாம் உலக சாதனை படைக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் அவர்களின் ஞாபகசக்தியும், எளிதில் புரிந்துகொள்ளும் திறனும் தான்.
உங்கள் வீட்டு குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வகையில், 'தினமலர்' எக்ஸ்போவில் 'வுட்டன் எஜூகேஷனல் டாய்ஸ்' குவிந்துள்ளன.
ஞாபக சக்திக்கு மெமரி கேம், மூளைத் திறனை அதிகரிக்க 'மைண்ட் கேம்',மாண்டிசோரி டாய்ஸ் என 100க்கும் மேற்பட்ட வகை வகையான டாய்கள் 'கிட்ஸ் டிரீம்' ஸ்டாலில் உள்ளன.
சிறு சிறு டாய்கள் முதல் குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தை துாண்டும் வகையில் 'சையின்டிபிக் டாய்கள்' அதிகம் உள்ளன.
இது மட்டுமின்றி, சிறுவர்கள் விரும்பும் நரூட்டோ, இட்டாச்சி, தக்காஷி, ஹேரி பாட்டர், சின்சான், கால்பந்து வீரர்கள், 2கே கிட்ஸ்பேவரெட் 'பி.டி.எஸ்.,' பொம்மைகள் பலரின் கவனத்தை பெற்றது.
கலர் கலர் பபுல் மிஷன் கன், எலக்ட்ரிக் ரயில் வண்டி, ஹெலிகாப்டர், சிறு சிறு கார்கள் முதல் பெரிய மெட்டல் கார்கள், பைக், லியோ துப்பாக்கி என சிறுவர்களுக்கு சாய்ஸ் அதிகம்.
சுட்டிகள் ஆகலாம் குட்டி மெஜிசியன்
உங்கள் வீட்டு குழந்தை கள் குட்டி 'மெஜிசியனாக' மாற இரண்டு அரங்கு களில் 'மெஜிக் பாக்ஸ்' விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளை பேப்பர், ரூபாய் நோட்டாக மாறும்; பச்சை நிறம், சிவப்பு நிறமாக மாறும்; துண்டு துண்டாக வெட்டப்பட்ட ரிப்பன் ஒட்டும். 'டேய் எப்புட்றா' என வியந்து பார்க்க வைக்கும் வகையில் இரண்டு விதமான 'மேஜிக் பாக்ஸ்' உள்ளன. 12 வகையான மேஜிக், 16 வகையான மேஜிக் என இரண்டு வகையில் உள்ளன. உங்கள் வீட்டு குட்டிகள் இதில் காட்டும் வித்தையை நேரம் போவதே தெரியாமல் ரசிக்கலாம்.
எழுதுபொருட்கள் ஒரே இடத்தில்...
எல்.கே.ஜி., செல்லும் குழந்தைகள் முதல் இன்ஜி., ஆர்கிடெக்ச்சர் (கட்டடவியல்) மாணவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பென்சில், ரப்பர், ஜியோ பாக்ஸ், கலர் பென்சில், ஸ்கெட்ச், கிளே, பிரஸ், நோட்புக்ஸ், டிராயிங் போர்டு, பிக்மென்ட் லைனர், ஸ்கெட்ச் புக், கார் போன்ற ரப்பர் போன்ற அனைத்தும் 'டோம்ஸ்' ஸ்டாலில் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான 'புல் ஸ்கூல் ஸ்டேஷனரி'யும் ஒரே இடத்தில் அதுவும் 10 சதவீதம் தள்ளுபடியில் வாங்க வேண்டும் என்றால், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போவில் மட்டுமே கிடைக்கும்.

