/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகள் வாலிபால்; கோவை அணி வெற்றி
/
மாற்றுத்திறனாளிகள் வாலிபால்; கோவை அணி வெற்றி
ADDED : மே 29, 2024 11:53 PM
திருப்பூரில் நடந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்ந்த நிலை வாலிபால் போட்டியில் அசத்திய, கோவை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ரோட்டரி திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி, கிழக்கு ரோட்டரி, போனெக்ஸ் பாராஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில பாரா சிட்டிங் (அமர்ந்த நிலையில்) வாலிபால் போட்டி, நடந்தது.
சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், மாநிலம் முழுதும், 12 மாவட்டங்களில் இருந்து, 12 அணிகள்; 120 விளையாட்டு வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
காலை முதல் மாலை வரை லீக், 'நாக்-அவுட்' சுற்றுகளாக போட்டிகள் நடந்தது. இறுதி போட்டியில் கோவை - கிருஷ்ணகிரி அணிகள் மோதின.பரபரப்பான நடந்த போட்டியில், 25 - 15 என்ற புள்ளிக்கணக்கில் கோவை அணி வெற்றி பெற்றது. திருப்பூர் அணி மூன்றாமிடமும், சிவகங்கை அணி நான்காமிடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- நமது நிருபர் -