/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரிடர் மீட்பு குழுவினர் மக்களுக்கு விழிப்புணர்வு
/
பேரிடர் மீட்பு குழுவினர் மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 02, 2024 06:10 AM

மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே காந்தையூர் பவானி ஆற்றங்கரையில், நேற்று தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர், அப்பகுதி மக்களுக்கு பேரிடர் காலங்களில், நடந்து கொள்ளும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் மேட்டுப்பாளையத்தில் முகாமிட்டுள்ளனர். நேற்று இக்குழுவின் ஆய்வாளர் வீரராகவன் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர், சிறுமுகை அருகே காந்தையூர் பவானி ஆற்றங்கரையில் அப்பகுதி மக்களுக்கு, வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை தற்காத்துக்கொள்வது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுகுறித்து, பேரிடர் குழுவினர் மக்களிடம் கூறுகையில், பேரிடர் காலங்களில், மாநில அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண் 1077 உள்ளிட்ட எண்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீர் புகாத பைகளில் முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும், பேரிடர் காலங்களில் ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தங்குமிடங்களை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும், என்றனர்.