/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
/
பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
ADDED : மே 23, 2024 11:09 PM

மேட்டுப்பாளையம்;கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழக அரசின் சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு, கடந்த 18ம் தேதி, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் படி பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 20 பேர், சப்- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசார் தங்கும் விடுதியில், தங்க வைக்கப்பட்டனர்.
இவர்கள் நேற்று மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், பலத்த சூறைக்காற்று காரணமாக சாலையில் சாய்ந்து விழும் மரங்களை நவீன அறுவை இயந்திரம் வாயிலாக உடனடியாக வெட்டி அகற்றுவது எப்படி, வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது எப்படி, உயிருக்கு போராடுவோருக்கு முதலுதவி, போன்ற செயல் விளக்க ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.---