/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி வங்கிகளுடன் கலந்துரையாடல்
/
சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி வங்கிகளுடன் கலந்துரையாடல்
சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி வங்கிகளுடன் கலந்துரையாடல்
சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி வங்கிகளுடன் கலந்துரையாடல்
ADDED : ஜூலை 18, 2024 11:49 PM
கோவை;'கொடிசியா', 'சீமா', 'காட்மா' உள்ளிட்ட தொழில்துறை அமைப்புகள் சார்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்.எஸ்.எம்.இ.,) வழங்கப்படும் நிதி மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்கும் நிதியுதவி மற்றும் மானியத் திட்டங்கள் தொடர்பாக, மாவட்ட தொழில் மையம், இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி, நேஷனல் சிறு தொழில்கள் கழகம், முன்னணி வங்கி மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் ஆக்சிஸ் வங்கி, பெடரல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, யெஸ் வங்கி, சவுத் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பேசினர்.
நிதியை பெறுவதில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் நிதியை வழங்குவதற்கு வங்கிகளுக்கு உள்ள பிரச்னைகள் தொடர்பாக கலந்துரையாடல் நடத்தப்பட்டது.