/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளியில் நோய் தாக்குதல்; கட்டுப்படுத்த அறிவுரை
/
தக்காளியில் நோய் தாக்குதல்; கட்டுப்படுத்த அறிவுரை
ADDED : பிப் 21, 2025 11:02 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சாகுபடியில் ஏற்படும் நோயை கட்டுப்படுத்த, தோட்டக்கலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கிணத்துக்கடவு வட்டாரத்தில் தென்னைக்கு அடுத்தபடியாக காய்கறி சாகுபடி உள்ளது. இதில், அதிகளவு தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தக்காளியில் பல்வேறு நோய் தாக்குதலால் அப்பகுதி விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, தோட்டக்கலைத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இதில், புள்ளிவாடல், இலைபேன்கள் மற்றும் வெள்ளை ஈக்கள் போன்றவைகளால் தக்காளி செடிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த, ஒரு ஹெக்டேருக்கு, டைமீதோயேட் 500 மில்லி அல்லது இமிட்டாகுலோபிரிட் 100 மில்லியை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த, மென்கோசெப் என்ற பூஞ்சாண கொல்லியை ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் அல்லது அசாக்சிஸ்ட்ரோபின் உடன், டைபென்கொனாசோல் 500 மில்லியை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், இலை புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.