/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவனம் சிதறினால் அவ்ளோதான்! ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
/
கவனம் சிதறினால் அவ்ளோதான்! ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
கவனம் சிதறினால் அவ்ளோதான்! ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
கவனம் சிதறினால் அவ்ளோதான்! ரோடு சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 15, 2024 12:13 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஆர்.ஆர்., தியேட்டர் ரோட்டின் நடுவே மெகா பள்ளம் உள்ளதால் விபத்துகள் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி ஆர். ஆர்., தியேட்டர் ரோடு வழியாக, பாலகோபாலபுரம் வீதி, அன்சாரி வீதி, நாச்சிமுத்து வீதி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். நகராட்சி வரி வசூலிப்பு மையம் அருகே ரோட்டின் நடுவே பள்ளமாக உள்ளதால், விபத்துகள் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
குடிநீர் குழாய் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்ட ரோடு முறையாக மூடப்படாமல் உள்ளது. இதனால், மழை காலத்தில் ரோடு அரிக்கப்பட்டு, பள்ளமாக மாறியுள்ளது.
வேகமாக வரும் வாகன ஓட்டுநர்கள், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டுநர்கள், பள்ளத்தை கவனிக்காமல் கீழே விழும் அபாயம் உள்ளது. மழை காலங்களில் இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகனங்கள் சிக்கி கொள்கின்றன. மேலும், வாகனங்கள் பள்ளத்தில் ஏறி இறங்குவதால் பழுதடைகின்றன. நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ரோட்டை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.