sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சான்று செய்யப்பட்ட 60 டன் 'கோவை விதைகள்' ஏழு மாவட்டங்களில் விதைப்புக்கு வினியோகம்

/

சான்று செய்யப்பட்ட 60 டன் 'கோவை விதைகள்' ஏழு மாவட்டங்களில் விதைப்புக்கு வினியோகம்

சான்று செய்யப்பட்ட 60 டன் 'கோவை விதைகள்' ஏழு மாவட்டங்களில் விதைப்புக்கு வினியோகம்

சான்று செய்யப்பட்ட 60 டன் 'கோவை விதைகள்' ஏழு மாவட்டங்களில் விதைப்புக்கு வினியோகம்


ADDED : ஆக 17, 2024 11:48 PM

Google News

ADDED : ஆக 17, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சம்பா பருவத்தில் விதைக்க ஏதுவாக, தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு, 60 டன் சான்று செய்யப்பட்ட நெல் விதைகள், துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் (டியூகாஸ்) வாயிலாக வினியோகிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில், சிறப்பிடம் பெற்றுள்ளது. 1977ல், விதைப்பிரிவு துவங்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், நெல் விதைகள் வேண்டி, அங்குள்ள கூட்டுவு சங்கங்களை தொடர்பு கொள்ளும் நிலையில், கூட்டுறவு சங்கங்கள், துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் வாயிலாக பெற்று, விவசாயிகளுக்கு வினியோகிக்கிறது.

ஜனவரி முதல் மார்ச் வரை இருக்கும் குறுவை பருவத்துக்கும், ஆக., முதல் அக்., வரை இருக்கும் சம்பா பருவத்துக்கும் விதைக்க ஏதுவாக, நெல் விதைகள் வினியோகிக்கப்படுகின்றன.

இதற்காக, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் நெல் ஆராய்ச்சி நிலையங்களில், தாய் நெல் விதைகளை வாங்கி, தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் வாயிலாக, கோவை தொண்டாமுத்துார், செம்மேடு பகுதிகளில் பயிரிட செய்து, விதைகள் பெற்று, சான்று செய்யப்பட்ட விதைகளாக, விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப, கூட்டுறவு சங்கங்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன. அதன்படி, சம்பா பருவத்தில் விதைக்கும் வகையில், திருச்சி, திருவண்ணாமலை, அரூர், புதுக்கோட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 60 டன் வரை, சான்று செய்யப்பட்ட நெல் விதைகள் வினியோகிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, 'டியூகாஸ்' இணைப்பதிவாளர் பழனிச்சாமி கூறியதாவது:

தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் வாயிலாக, நெல் பயிரிடப்பட்டு விதைகள் சேகரிக்கப்படுகின்றன. இதிலும், பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, சான்று செய்வதற்கான தரம் இருக்க வேண்டும் என்பதற்காக, விதை சான்று துறைக்கு அனுப்புவோம்.

தேர்ச்சி பெற்ற பின், சான்று செய்து, கூட்டுறவு சங்கங்களுக்கு, 'கோவை விதைகள்' என்ற பிராண்ட் பெயரில் வினியோகித்து வருகிறோம். தற்போது, சான்று செய்யப்பட்ட விதைகள், 190 டன் உற்பத்தி செய்துள்ளோம். சம்பா பருவத்துக்கு, ஏழு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு, 60 டன் வரை வினியோகித்துள்ளோம். தேவைக்கேற்ப மீண்டும் வினியோகிப்போம். குறுவை சாகுபடிக்கு, 20 டன் தயார் செய்து வழங்க முடியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us