/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடி விநியோகம்
/
பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடி விநியோகம்
ADDED : ஆக 08, 2024 11:35 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட, கல்லாறுபுதூரில் சற்குரு ஆதிவாசிகள் குருகுலப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் தேசிய உணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மேரி பாக்கியம் வளர்மதி தலைமை வகித்து வரவேற்றார். நகராட்சி பணியாளர் ஜெயராமன், சுதந்திர தினம் குறித்தும், சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தும், மாணவர்களுக்கு விளக்கி, தேசியக்கொடியை தங்கள் வீடுகளில் ஏற்ற வேண்டும் என, பேசினார்.
விழாவில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோர் தேசிய கொடியை கையில் பிடித்தபடி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.