தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாவட்ட கூடைப்பந்துஅசத்திய மாணவர்கள்

மாவட்ட கூடைப்பந்துஅசத்திய மாணவர்கள்

மாவட்ட கூடைப்பந்துஅசத்திய மாணவர்கள்


ADDED : ஜூலை 31, 2024 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2024 01:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை, ஜூலை 31-

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் சிறுவர்கள் தங்களின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தினர்.

பெர்க்ஸ் மெட்ரிக்., பள்ளி சார்பில் சிறுவர்களுக்கு 39வது ஆண்டு டாக்டர் ராம ரங்கநாதன் நினைவு மாவட்ட கூடைப்பந்து போட்டி பள்ளி வளாகத்தில் ஜூலை 29ம் தேதி முதல் ஆக., 2ம் தேதி வரை நடக்கிறது.

இதில், சிறுவர்களுக்கு 13, 14, 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டியை பெர்க்ஸ் மெட்ரிக்., பள்ளி தாளாளர் சித்தார்த் துவக்கி வைத்தார். பள்ளி மற்றும் கிளப் அணிகள் என 29 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டியிடுகின்றன.

முதல் சுற்று போட்டி முடிவுகள்:

19 வயது பிரிவில், பெர்க்ஸ் பள்ளி அணி 88 - 41 என்ற புள்ளிக்கணக்கில் நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ., பள்ளியையும், வித்யாநிகேதன் பள்ளி அணி 58 - 37 என்ற புள்ளிக்கணக்கில் நேஷனல் மாடல் மெட்ரிக்., அணியையும் வீழ்த்தின.

13 வயது பிரிவில், பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளி அணி 38 - 17 என்ற புள்ளிக்கணக்கில் சுகுணா பிப்ஸ் அணியையும், ராஜலட்சுமி மில்ஸ் ஏ அணி 53 - 24 என்ற புள்ளிக்கணக்கில் விப்ஜியார் அணியையும் வீழ்த்தின.

14 வயது பிரிவில் பெர்க்ஸ் பள்ளி 57 - 14 என்ற புள்ளிக்கணக்கில் விப்ஜியார் அணியை வீழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us