/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாரத், பி.எஸ்.ஜி., அணிகள் வெற்றி
/
மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாரத், பி.எஸ்.ஜி., அணிகள் வெற்றி
மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாரத், பி.எஸ்.ஜி., அணிகள் வெற்றி
மாவட்ட கூடைப்பந்து போட்டி; பாரத், பி.எஸ்.ஜி., அணிகள் வெற்றி
ADDED : ஜூலை 17, 2024 08:48 PM

கோவை : மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், பெண்கள் பிரிவில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணிகள் முதலிடம் பிடித்தன.
ஒய்.எம்.சி.ஏ., கோவை சார்பில், 68வது எஸ்.வெங்கடகிருஷ்ணன் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்தது. மினி பாய்ஸ், ஜூனியர் பாய்ஸ், சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டியில், 68 அணிகள் பங்கேற்றன.
இதில், மினி பாய்ஸ் பிரிவில் ராஜலட்சுமி மில்ஸ் அணி முதலிடம், விஷ்வதீப்தி அணி இரண்டாமிடம் பிடித்தன. ஜூனியர் பிரிவில் பெர்க்ஸ் அணி முதலிடமும், சபர்பன் அணி இரண்டாமிடமும் பிடித்தன.
பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில், கிருஷ்ணம்மாள் கல்லுாரி அணியை வீழ்த்தி பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது. ஆண்கள் பிரிவில், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, யுனைடெட் கூடைப்பந்து அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு, வழக்கறிஞர் ஆறுமுகம் பரிசுகளை வழங்கினார். ஒய்.எம்.சி.ஏ., கோவை தலைவர் ஜெயக்குமார் டேவிட், விளையாட்டு கமிட்டி தலைவர் எபிநேசர் டேவிட் ஆகியோர் உடனிருந்தனர்.