sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாவட்ட கூடைப்பந்து போட்டி; மாணவர்கள் அதிரடி

/

மாவட்ட கூடைப்பந்து போட்டி; மாணவர்கள் அதிரடி

மாவட்ட கூடைப்பந்து போட்டி; மாணவர்கள் அதிரடி

மாவட்ட கூடைப்பந்து போட்டி; மாணவர்கள் அதிரடி


ADDED : ஜூன் 24, 2024 12:28 AM

Google News

ADDED : ஜூன் 24, 2024 12:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;பள்ளி மாணவர்களுக்கான, மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் சிறுவர்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர்.

ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், பள்ளி மாணவ - மாணவியருக்கு '3ம் ஆண்டு ஸ்ரீ நவக்கோடி நினைவு கோப்பைக்கான' மாவட்ட கூடைப்பந்து போட்டி, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நடக்கிறது.

மாணவ - மாணவியருக்கு 13 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நேற்று நடந்த போட்டி முடிவுகள் :

16 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில் பாரதி பள்ளி அணி 52 - 51 என்ற புள்ளிக்கணக்கில் சுகுணா பிப்ஸ் அணியையும், ராஜலட்சுமி மில்ஸ் அணி 49 - 37 என்ற புள்ளிக்கணக்கில் அல்வேர்னியா அணியையும், யுனைடெட் கூடைப்பந்து கழக அணி 35 - 34 என்ற புள்ளிக்கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., அணியையும் வீழ்த்தின.

16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், சபர்பன் பள்ளி அணி 66 - 10 என்ற புள்ளிக்கணக்கில் வித்ய நிகேதன் பள்ளியையும், ஒய்.எம்.சி.ஏ., அணி 69 - 48 என்ற புள்ளிக்கணக்கில் சிம்பா அணியையும் வீழ்த்தின.

13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், பொள்ளாச்சி பேஷன் அணி 45 - 11 என்ற புள்ளிக்கணக்கில் சின்மயா பள்ளியையும், பீப்பாள் பள்ளி அணி 32 - 12 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.வி.ஜி.வி., அகாடமியையும், எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணி 50 - 11 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளியையும் வீழ்த்தின.






      Dinamalar
      Follow us